நைஜீரிய பயணியிடம் ரூ.53 லட்சம் புதிய நோட்டுகள்

கோவை: கோவையில் நைஜீரி யாவைச் சேர்ந்த விமானப் பயணி யிடம் 58 லட்சம் ரூபாய் புதிய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. டெல்லியிலிருந்து தனி யார் விமானம் மூலம் நேற்று முன் தினம் காலை கோவை வந்தி றங்கினார் அந்த ஆடவர். விமான நிலையத்தில் காத் திருந்த வருமான வரித் துறை அதிகாரிகள் விமானத்திலிருந்து இறங்கி வந்த அந்தப் பயணியை சுற்றிவளைத்து அவரது கைப் பையைச் சோதனை செய்தனர். பைக்குள் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ரூ.53 லட்சம், பழைய 500, 1000 ரூபாய் நோட்டு கள் ரூ.4.29 லட்சம், 100 ரூபாய் நோட்டுகள் 40,000 என மொத்தம் ரூ.57.69 லட்சம் இருந்தது.

அந்த ரொக்கப் பணக் கட்டு களைப் பறிமுதல் செய்த அதிகாரி கள் அந்த ஆடவரை விசா ரணைக்கு அழைத்துச் சென்றனர். அந்த நைஜீரிய நாட்டவரின் பெயர் சுவெட்பெலு, 35, என்பதும் போலி பாஸ்போர்ட் மூலம் அவர் இந்தியா வந்தார் என்பதும் விசா ரணையில் தெரியவந்தது. இவர் மீது போதைப்பொருள் கடத்தல் உட்பட சில வழக்குகள் ஏற்கெனவே உள்ளன. புதிய 2000 ரூபாய் நோட்டு களை யாருக்காகக் கொண்டு வந்தார் என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!