சென்னை: முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவுக்குச் சொந்தமான இடங்களில் வரு மான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம், தங்கம், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக அதிர்ச் சியூட்டும் தகவல்கள் வெளியா யின. ஆனால், சோதனை மேற் கொண்ட வருமான வரித்துறை சார்பில் இதுபற்றி அதிகாரபூர் வமான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ராம மோகன ராவ் (படம்) வீட்டில் நடந்த சோதனையின் போது 'ரகசிய டைரி' ஒன்று வரு மான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியதாகவும் அதில் சில அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் களை அவர் எழுதி வைத்து இருப் பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. டைரியில் பெயர் இருப்பவர்களிடம் ராம மோகன ராவ் அவ்வப்போது தொலைபேசியில் உரையாடி இருப்பதும் தெரிய வந்துள்ளது.