பெண் போலிஸ் முகத்தில் அமிலம் வீச்சு

வேலூர்: வேலூர் அருகே பெண் காவலர் மீது அமிலம் வீசியவர் களை போலிசார் தேடி வருகின் றனர். வேலுர் மாவட்டம் திருப்பத் துர் என்ஜிஓ நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், லாரி ஓட்டுநர். இவரது மனைவி லாவண்யா, 27, திருப் பத்துர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணி யாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு பணி முடிந்ததும் அதே பகுதியில் காவலர் குடியிருப்பு வளாகத்துக்கு அருகே வசிக்கும் தனது அண்ணன் வீட்டுக்கு லாவண்யா நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த மர்ம நபர்கள் இருவர் திடீ ரென லாவண்யா மீது அமிலத்தை வீசிவிட்டுத் தப்பினர். இந்த கொடூரச் செயலால் லாவண்யாவின் முகம் மற்றும் கைகள் வெந்துபோயின. வேதனை தாளாமல் அப்பெண் அலறித் துடித்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார் உடனடியாக அவரை மீட்டு திருப்பத்துர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

முகம் சிதைந்த நிலையில் மருத்துவமனை யில் அனுமதிக் கப்பட்ட பெண் போலிஸ் லாவண்யா. மர்ம நபர்கள் அடிக்கடி லாவண்யாவிடம் கைபேசியில் ஆபாசமாகப் பேசியதாக அவரது தந்தை தெரிவித்தார். படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!