காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு (படம்) நேற்று முன்தினம் செய்தியாளர் களிடம் பேசினார். அப்போது அவர் குறிப் பிடுகையில், "தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் பிடிபட்டுள்ளது. "இதுபோல பல்வேறு சோதனை களில் பல கோடி பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. "இதன் பின்னணி குறித்த முழுவிவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும் ஏன் பிரத மராக இருந்தாலும்கூட பதவி விலக வேண்டும்.
"ரூபாய் நோட்டு விவகாரத் தில் தோல்வி அடைந்துவிட்டதை பொதுமக்களிடம் இருந்து திசை திருப்புவதற்காக இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின் றன. மேலும் 'ஜன்தன் யோஜனா' திட்டத்தில் வங்கிக் கணக்கில் பணம் பதுக்கியவர்களின் விவ ரங்களை பாஜக ஏன் வெளியிடத் தயங்குகிறது என்று தெரிய வில்லை. "இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது பாஜக மிகப் பெரிய திட்டத்துடன் உள்ளது தெளிவாகிறது. 2019ஆம் ஆண் டில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக திட்டமிட்டிருந்தால் அந்த எண்ணம் பலிக்காது. ஒரு வாக்குகூட கிடைக்காத நிலை தான் பாஜகவுக்கு ஏற்படும்," என்றார் குஷ்பு.