இனிமேல் பாஜகதான்

கோவை: தமிழக பாஜக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ், தமிழக பாஜக தலைவர் தமி ழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். முரளிதர ராவ் பேசுகையில், "ஒட்டுமொத்த இந்தியாவும் டிஜிட் டல் பரிவர்த்தனை செய்ய பாஜக முயற்சி செய்து வருகிறது. இந்த நேரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மட்டும் இன்னும் பணமாகவே வைத்திருக்கிறார்.

வருமான வரித்துறையும் அரசும் அதன் வேலையைச் செய்கிறது. ஐஏஎஸ் அதிகாரி நேர்மையாகப் பணி யாற்ற வேண்டும். அதைவிடுத்து பணத்தை வைத்து வர்த்தகம் செய்தால் இந்த சோதனை நடந்து தான் தீரும். ஒட்டுமொத்தத்தில் தமிழக மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மோடி அரசு நேர்மையான, கண் டிப்பான அரசு என்பதை தமிழக மக்கள் உணர்ந்துகொண்டார்கள். தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள கிரிஜா டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான வகுப்புகளை எடுக்க நான் பரிந்துரைக்கிறேன். "நாங்கள் ஊழலுக்கு எதிரான வர்கள்; ஊழலை எதிர்த்து பணி யாற்றி வருபவர்கள். தமிழகம் கடந்த 15 ஆண்டுகளில் ஒட்டு மொத்த மாக ஊழல்மயமாகிவிட்டது. இனி அப்படி இருக்காது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!