காலாங்கில் தொடர்கிறது ரோச்சோர் செண்டர் சமூகம்

ரோச்சோர் செண்டர் கூடிய விரைவில் தகர்க்கப்படவிருந்தா லும் அங்கு வாழ்ந்த மக்களின் பழைய சமூக உணர்வு காலாங் ட்ரைவிஸ்தாவில் நீடித்து நிலைக் கிறது. அப்பர் பூன் கெங் சாலையில் கட்டப்பட்ட காலாங் ட்ரைவிஸ்தா குடியிருப்பு ஜூன் மாதம் முழு மையாகக் கட்டி முடிக்கப்பட்டது. மஞ்சள், பச்சை, சிவப்பு, நீல நிற வண்ணங்களுடன் தனித்துவ மாகக் காட்சியளித்த ரோச்சோர் செண்டரின் குடியிருப்பாளர்களில் பெரும்பாலோர் காலாங் ட்ரைவிஸ் தாவில் குடியேறிவிட்டனர்.

ரோச்சோர் செண்டரில் வாழ்ந்துவந்த 567 குடும்பங்களில் 504 குடும்பங்கள் காலாங் ட்ரைவிஸ்தாவில் குடியேறினர். இப்போது, காலாங் ட்ரைவிஸ்தா வின் புதிய அடுக்குமாடி வீடு களின் ஐந்தில் மூன்று வீடுகளில் முன்னைய ரோச்சோர் செண்டர் குடியிருப்பாளர்கள் வாழ்கின்றனர். காலாங் ட்ரைவிஸ்தா குடியி ருப்பில் 808 வீடுகள் உள்ளன. ரோச்சோர் சென்டர் குடியிருப்பாளர் களில் பெரும்பாலோர் புதிய வீட் டின் சாவியைப் பெற்றுக் கொண்டு குடிபெயர்ந்து விட்டனர்.

அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட 'காலாங் ட்ரைவிஸ்தா' பிடிஓ வீடுகளுக்கு ரோச்சோர் செண்டரில் வசித்த பெரும்பாலான குடியிருப்பா ளர்கள் இடம் மாறவிருக்கிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!