ஹலிமா: சமூக பந்தத்தை வளர்ப்பது முக்கியமானது

சிங்கப்பூர் மெத்தனமாக இருக்க முடியாது என்பதை பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் போன்ற சம்பவங்கள் எடுத்துக்காட்டுவதாக நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் நேற்று கூறினார். இத்தகைய விபரீத சம்பவங் களுக்கு எதிராகப் பாதுகாத்துக் கொள்ள வலுவான சமூக உறவை வளர்ப்பது முக்கியம் என்றார் அவர். "இதுபோன்ற சூழ்நிலையை நாம் அடையக் கூடுமாயின், அதற்கு முன்பாக, மிகவும் வலு வான அடிப்படை நிர்மாணிக்கப்பட்டி ருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்," என்றார் அவர். திருவாட்டி ஹலிமா அடித்தள ஆலோசகராக இருக்கும் மார்சி லிங்-இயூ டீ குழுத்தொகுதியில் வசதி குறைந்த சிறுவர்களுக்காக நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட் டத்தில் செய்தியாளர்களின் கேள் விக்கு அவர் பதிலளித்தார்.

சிறுவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களை கிறிஸ்துமஸ் பரிசுகளாக வழங்குகிறார் நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் (வலது). படம்: பெரித்தா ஹரியான்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!