இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

நியூயார்க்: மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலம் பகுதியில் இஸ்ரேல் சட்டவிரோதமாக வீடுகள் கட்டுவதற்கு எதிராக ஐநா பாதுகாப்பு மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அப்பகுதிகளில் சட்டவிரோதமாக குடியிருப்பு வீடுகள் கட்டுவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த அத்தீர்மானம் வலியுறுத்துகிறது. இஸ்ரேலுக்கு எதிராக முதலில் எகிப்து அத்தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடத்துமாறு ஐநா பாதுகாப்பு மன்றத்தை கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் அந்த விவகாரத்தில் தலையிடுமாறு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவிருக்கும் திரு டோனல்ட் டிரம்ப்பை இஸ்ரேல் கேட்டுக் கொண்டதையடுத்து அத்தீர்மானம் மீட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் மலேசியா, நியூசிலாந்து, வெனிசுவேலா ஆகிய நாடுகள் மீண்டும் அத்தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டன. அதனைத் தொடர்ந்து அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!