ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடு முறையின்போது பயங்கரவாதி கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதை கருத்தில்கொண்டு இந்தோனீசியப் போலிசார் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். குறிப்பாக மக்கள் ஒன்றுகூடும் இடங்களிலும் தேவாலயங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தோனீசியப் போலிசார் பல இடங்களில் மேற்கொண்ட அதிரடி சோதனையின்போது ஐந்து சந்தேகப் பேர்வழிகளைக் கைது செய்ததன் மூலம் அவர்களின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக போலிசார் கூறினர். இந்நிலையில் இந்தோனீசியாவில் சுமார் 155,000 போலிசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடு பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் நாடிச் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்களை முறியடிக்க போலிசார் உச்சகட்ட விழிப்பு நிலையில் உள்ளனர்.
ஜகார்த்தா தேவாலயத்தில் சோதனை மேற்கொள்ளும் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள். படம்: ஏஎஃப்பி