‘தங்க’ மாரியப்பனுக்கு தமிழக அரசு ரூ.2 கோடி பரிசு

இவ்வாண்டு செப்டம்பரில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உடற்குறையுள்ள விளையாட்டு வீரர்களுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. அதில் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார் தமிழகத்தின் சேலம் மாவட்டம், பெரியவடகம்பட்டி எனும் சிற்றூரைச் சேர்ந்த மாரியப்பன், 21 (நடுவில்). இவருக்குத் தமிழக அரசின் சார்பில் இரண்டு கோடி ரூபாய் பரிசளிக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் மாரியப்பனுக்கு ரூ.2 கோடிக்கான காசோலையை வழங்கினார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (வலது). உடன் மாரியப்பனின் பயிற்றுவிப்பாளர் சத்தியநாராயணா. முன்னதாக, மத்திய அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகையை மாரியப்பனுக்கு வழங்கி இருந்தது நினைவுகூரத்தக்கது. படம்: பிடிஐ

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!