ஒரே ஒரு ரூபாய்க்காக ஒரு கொலை!

ஒரு ரூபாய் பிரச்சினைக்காக ஒருவரைக் கொலை செய்த ஆடவரின் ஆயுள் தண்டனை ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை யாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே சி பட்டி யில் சீட்டுக்கார பாலு என்ற பாலகிருஷ்ணன் என்பவரும் அவ ருடைய மகனும் சேர்ந்து உணவங் காடி ஒன்றை நடத்தி வந்தனர். கடந்த 2009 மார்ச் 9ஆம் தேதி இரவு கருப்பசாமி என்பவர், தன் நண்பருடன் சேர்ந்து திரு பால கிருஷ்ணனின் உணவங்காடிக்குச் சென்றார். கருப்பசாமி மூன்று புரோட்டா வாங்கினார். அவரிடம் பணம் இல்லை என்பதால் உடன் வந்த நண்பர் திரு பாலகிருஷ்ணனிடம் பத்து ரூபாயைக் கொடுத்தார். மூன்று புரோட்டாவுக்கான விலை ஒன்பது ரூபாய் போக, மீதம் ஒரு ரூபாயைக் கேட்டார் கருப்பசாமி. ஆனால், அவரிடம் ஒரு ரூபாயைக் கொடுக்க மறுத்த திரு பாலகிருஷ்ணன், கருப்ப சாமியின் நண்பர்தான் பணம் தந்தார் என்றும் அவரிடமே மீதிப் பணத்தைத் தருவேன் என்றும் கூறினார்.

வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த கருப்பசாமி ஒரு கட்டத்தில் தன்னிடமிருந்த அரி வாளால் திரு பாலகிருஷ்ணனின் கழுத்தில் வெட்டினார். அதோடு நில்லாது, தடுக்க வந்த திரு பாலகிருஷ்ணனின் மகனையும் அவர் கடித்தார். வெட்டுப்பட்ட திரு பால கிருஷ்ணனை விரைந்து மருத் துவமனைக்குக் கொண்டு சென்றபோதும் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறி மருத்து வர்கள் கைவிரித்துவிட்டனர். இதையடுத்து, மறுநாள் போலி சார் கருப்பசாமியைக் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, முடிவில் கருப்பசாமிக்கு ஆயுள் தண் டனை விதிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!