தாக்குதல் சதி முறியடிப்பு

புத்தாண்டு நாளுக்கு முதல் நாள் மேற்கு ஜாவாவிலுள்ள போலிஸ் சாவடி மீது பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த ஐஎஸ் அமைப் புடன் தொடர்புடைய பயங்கர வாதக் குழுவைச் சேர்ந்த இரு வரை இந்தோனீசிய பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் நேற்று முன்தினம் சுட்டுக்கொன்றனர். மேலும் இருவர் கைது செய்யப் பட்டனர். சில நாட்களுக்கு முன்னர் ஜகார்த்தாவில் உள்ள துணைக் கோள நகரத்தில் இருக்கும் போலிஸ் சாவடி மீது கிறிஸ் துமசுக்கு முதல் நாள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறி போலிசார் நடத்திய அதிரடி சோதனையின்போது மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல் லப்பட்டனர். இந்நிலையில், 'ஜமா அன் ஷருட் தௌலா' எனும் இன் னொரு பயங்கரவாத அமைப் பினரின் சதிச் செயல்களும் அம்பலமாகியிருப்பது இந்தோ னீசியா கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி இருப்பதை உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.

"குறிப்பிட்ட போலிஸ் சாவ டியை அணுகி, அங்கு பணியில் இருக்கும் போலிஸ் அதிகாரி களை அரிவாள், கத்தி கொண்டு இருவர் தாக்குவது என்றும் மோட்டார்சைக்கிள்களில் இருந்த படி சுற்றுமுற்றும் நோட்டம் பார்ப் பதும் தாக்குதலுக்குப் பின் அவர் களை அழைத்துக்கொண்டு தப்புவதும் மற்ற இருவரது பணி என்றும் திட்டமிட்டிருந்தனர்," என்று போலிஸ் பேச்சாளர் ரிக்வான்டோ நேற்று செய்தி யாளர்களிடம் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!