700 பேர் மூலம் வங்கியில் பணம் மாற்றிய இந்திய நிதியாளர்

இந்தியாவின் குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்த நிதியாளர் கிஷோர் பஜியாவாலாவிடம் (படம்) இருந்து கணக்கில் வராத ரூ.10.45 கோடி பணத்தை வரு மான வரித்துறையினர் அண் மையில் கைப்பற்றினர். சுமார் 400 கோடி ரூபாய் அள வுக்கு கிஷோர் பஜியாவாலாவிடம் சொத்து இருக்கிறது. செல்லா நோட்டு அறிவிப்புக்குப் பிறகு வங்கியில் பணம் செலுத்தவும் எடுக்கவும் 700 பேரை அவர் பயன்படுத்தியதாக சிபிஐ வட்டா ரங்கள் தெரிவித்தன. அவர் 27 வங்கிக் கணக்கு கள் வைத்திருந்ததாகவும் அதில் 20 'பினாமி' கணக்குகளின் மூலம் ஏராளமான பணத்தை மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆயினும், எவ்வளவு கறுப்புப் பணத்தை அவர் வங்கியில் செலுத் தினார், மாற்றினார் என்ற விவரம் தெரியவில்லை. அ வ ரி ட மி ரு ந் து புதிய நோட்டுகளாக ரூ.1.45 கோடி, ரூ.1.48 கோடி மதிப்புடைய தங்கம், ரூ.4.9 கோடி மதிப்புள்ள தங்க நகை கள், ரூ.1.4 கோடி மதிப்பிலான வைர நகைகள், ரூ.77.8 லட்சம் பெறுமானம் உடைய வெள்ளிக் கட்டிகள் ஆகியவற்றை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!