‘ஆற்று மணல் விற்பனையில் `4.75 லட்சம் கோடி ஊழல்’

தமிழகத்தில் கடந்த 13 ஆண்டு களில் ஆற்று மணலை அள்ளி, விற்பதன் மூலம் சுமார் ரூ. 4.75 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மதுக்கடைகள் அரசுடைமை ஆக்கப்பட்டபின் அரசாங்கத் திற்குக் கிடைக்கும் வருவாய் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ஆற்று மணல் மூலம் கிடைக்கும் வருவாய் மட்டும் குறைந்திருப்பது ஏன் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

"மணல் விற்பனையை முறைப் படுத்தி, அரசின் வருவாயை அதி கப்படுத்தப் போவதாகக் கூறி 2003ஆம் ஆண்டில் ஆற்று மணல் குவாரிகள் அரசுடைமையாக்கப் பட்டன. ஆனால், மணல் குவாரி கள் அரசுடைமையாக்கப்பட்டபின் ஆட்சியாளர்களின் வருவாய் மட் டுமே அதிகரித்துள்ளது. இதற்கு ஊழல்தான் காரணம். "மதுக்கடைகளையும் அரசே ஏற்று நடத்தப் போவதாக 2003ல் தான் அறிவிக்கப்பட்டது. அப் போது, டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.3,639 கோடி. இது 2013-14ல் 643% அதிகரித்து ரூ.23,401 கோடியாக உயர்ந்தது.

"மாறாக, 2003-04ஆம் ஆண் டில் ரூ.150 கோடியாக இருந்த மணல் வருவாய் 2013-14ல் ரூ.133.37 கோடியாகக் குறைந்து விட்டது. மணலைவிட மணல் மூலம் கிடைத்த பணத்தை ஆட்சி யாளர்கள் அதிகமாகச் சுரண்டி யதே இதற்குக் காரணம்," என்று ராமதாஸ் அறிக்கை மூலம் தெரி வித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!