முஹம்மது ஃபைரோஸ்
பிரபல உள்ளூர் நடனக் கலைஞர் ரமேஷ் ஜான், மலேசியத் தமிழ்த் திரைப்படம் ஒன்றில் நகைச்சுவைக் கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நகைச்சுவை நடிகர்' விருதைத் தட்டிச் சென்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று மலேசியாவின் ஷா ஆலம் நகரில் முதன் முறையாக நடந் தேறிய மலேசிய இந்தியத் திரைப்பட விருது நிகழ்ச்சியில் இவருக்கு இவ்விருது வழங்கப் பட்டது. மலேசிய இயக்குநர் லோகரூபன் லோகநாதன் இயக் கத்தில் கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியிடப்பட்டது நகைச்சுவைத் திரைப்படம் 'அவனாநீ'. ரமேஷ்வரா என்று பலராலும் அழைக்கப்படும் ரமேஷ் ஜான், அத்திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படத்தின் தலைப்புக்கு ஏற்றாற்போல இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் பெண் நடை, பாவனையை வெளிப்படுத்த வேண்டும். படத்தில் நிறுவனம் ஒன்றில் முதலாளியாக நடித்துள்ள இவர், மென்மையான நடிப்புத் திறனைச் இயல்பாக வெளிக் கொணர்ந்தார்.
மலேசியாவின் ஷா ஆலம் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று முதன் முறையாக நடந்தேறிய மலேசிய இந்திய திரைப்பட விருது நிகழ்ச்சியில் 'சிறந்த நகைச்சுவை நடிகர்' விருதை வென்ற உள்ளூர் நடனக் கலைஞர் ரமேஷ்வரா. படம்: ரமேஷ்வரா