ராணுவப் பயிற்சிக்கு இடம்: ஆஸி. விவசாயிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் வடக்கு குவீன்ஸ்லாந்தில் பெரிய ஒரு நிலப்பரப்பை சிங்கப்பூரைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பயிற்சி பெறு வதற்கான இடமாக உருவாக்கலாம் என்று ஆஸ்திரேலியா அரசாங்கம் திட்டமிடுகிறது. ஆனால் இந்தத் திட்டத்திற்கு இப்போது எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அந்த நிலப்பரப்புக்குச் சொந்த மான விவசாயிகள் தங்கள் நிலத்தை விற்கவேண்டிய சூழ் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இதை அவர்கள் விரும்பவில்லை என்பதே பிரச்சினைக்கு காரணம். சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் செய்துகொண்டிருக்கும் ராணுவப் பயிற்சி உடன்பாட்டை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் ஆனால் தங்களுடைய நிலத்தை விற்க வேண்டியிருப்பது நியாய மானதாக தெரியவில்லை என்றும் இத்தகைய முடிவு தங்களுக்குப் பெரும் வியப்பாகிவிட்டது என்றும் அந்த விவசாயிகள் கூறுகிறார்கள். அந்த நிலத்தை தங்களுடைய குடும்பங்கள் தலைமுறை தலை முறையாக ஆண்டு அனுபவித்து வருவதாகவும் அந்த நிலம், விவ சாயத்திற்குச் செழுமையான நிலம் என்றும் தெரிவித்திருக்கும் விவ சாயிகள், ராணுவப் பயிற்சிக்கு வேறு இடத்தை பரிசீலிக்கும்படி அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!