கிளோப்: காயங்களால் லிவர்பூலுக்குப் பாதிப்பு

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் லிவர்பூல் இன்று ஸ்டோக் சிட்டியுடன் மோதுகிறது. தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்து லீக் பட்டியிலில் முன்னிலை வகிக்கும் செல்சியைப் பின்னுக்குத் தள்ள லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப் வியூகம் வகுத்து வருகிறார். ஆனால் தமது திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக லிவர்பூல் குழுவின் வீரர்கள் பலர் அடிக்கடி காயம் காரணமாகக் களமிறங்க முடியாத நிலை ஏற்படுவதை கிளோப் சுட்டினார்.

இன்றைய ஆட்டத்திலும் காயம் காரணமாக லிவர்பூலின் முக்கிய ஆட்டக் காரரான ஃபிலிப் கோட்டின்ஹோ விளையாடமாட்டார் என்று தெரி விக்கப்பட்டது. லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கும் செல்சிக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்து வருவதாக கிளோப் கூறினார். லிவர்பூலை உலுக்கி வரும் காயப் பிரச்சினை செல்சிக்குக் கருணை காட்டி வருவதாக அவர் தெரிவித்தார்.

அண்மையில் சண்டர்லேண்ட் குழுவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூலின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஃபிலிப் கோட்டின்யோ (வலது) காயமடைந்தார். இதன் விளைவாக அவர் ஸ்டோக் சிட்டிக்கு எதிராக இன்றைய ஆட்டத்தில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!