பிரபல பிரிட்டிஷ் பாப் இசைப் பாடகர் ஜார்ஜ் மைக்கல் மரணம்

லண்டன்: பிரபல பிரிட்டிஷ் பாப் இசைப் பாடகர் ஜார்ஜ் மைக்கல் அவரது 53வது வயதில் மரணம் அடைந்தார். லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்று அவர் மரணம் அடைந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். உடல்நலக் குறைவு காரணமாக நீண்ட காலம் மருத்துவ சிசிக்சை பெற்று வந்த மைக்கல் ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கான காரணம் அறியப்படவில்லை என்றாலும் அவரது மரணத்தில் எத்தகைய சந்தேகத்திற்குரிய அம்சமும் இல்லை என்று பிரிட்டிஷ் காவல்துறையினர் தெரிவித்தனர். ஜார்ஜ் மைக்கேல் அவரது பாப் இசை மூலமாக உலகப் புகழ் பெற்றார். அவரது பாடல் தொகுப்புகள் கோடிக்கணக்கில் விற்பனை ஆகியுள்ளன. சொந்தமாக பாடல்களை எழுதிப் பாடிய அவர், தமது சக பாடகருடன் 1980களில் பாடிய காலக்கட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்தார். பின்னர் தனிப்பாடகராக விளங்கிய காலத்திலும் அவர் பல ரசிகர்களை ஈர்த்தார்.

மறைந்த பாடகர் ஜார்ஜ் மைக்கல். கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!