ரஷ்ய விமான விபத்து: தேடும் பணி தீவிரம்

மாஸ்கோ: மொத்தம் 92 பேருடன் சிரியாவுக்குப் புறப்பட்ட ரஷ்ய ராணுவ விமானம் ஒன்று கருங்கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியதையடுத்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். போர்க் கப்பல்கள், ஹெலிகாப்டர் கள், ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் உதவி யுடன் சுமார் 3,500 மீட்புக் குழுவினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ரஷ்ய தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், விமான விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று அறி வித்தது. விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியில் இதுவரை 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட முக்குளிப்பாளர்கள் கடலில் மூழ்கி உடல்களைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்த உயர்நிலை விசாரணை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி விசாரணைக் குழுவினர் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர்.

ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கிய கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பயணிகளின் உடைமைகளை மீட்புக் குழுவினர் வெளியில் கொண்டு வருகின்றனர். அந்த விமானத்தில் சென்ற 92 பேரும் விபத்தில் உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!