ஆலந்தூர்: தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ள திருநாவுக்கரசர் மீது தமிழக பாரதிய ஜனதா தலை வர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. திருநாவுக்கரசர் காங்கிரஸ் தலைவரா அல்லது அதிமுக தலை வரா என்பதே அவரது சந்தேகம். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமி ழிசை சவுந்தரராஜன் இந்த சந்தே கத்தை எழுப்பினார். "காங்கிரஸ் தலைவர் திரு நாவுக்கரசர் தமிழத்தில் பாரதிய ஜனதா புழக்கத்தில் இல்லாத கட்சி என்று கூறியுள்ளார்.
அவரைப்போல் மற்ற கட்சிக்கு மாறுகிற பழக்கம் இல்லாத கட்சி தான் எங்களுடையது. அவருடைய கட்சியை அவர் பார்க்கட்டும்," என்று தமிழிசை சவுந்தரராஜன் சொன்னார். "காங்கிரஸ் கட்சிக்கு திரு நாவுக்கரசர் தலைவராக இருப்பது துரதிருஷ்டவசமானது. அவர் சில நேரங்களில் காங்கிரஸ் தலைவரா? அதிமுக தலைவரா? என்ற சந் தேகம் எழுகிறது," என்றும் அவர் கூறினார்.