முதுகில் குத்தாதீர்கள்: வருத்தப்படும் அருண்விஜய்

'குற்றம் 23' படம் பொங்கல் பண்டிகையின்போது வெளியாகும் என அதன் நாயகன் அருண்விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துள் ளார். "போட்டி குறித்துக் கவலை யில்லை. எது நல்ல படம் என மக் கள் முடிவு செய்யட்டும். பொங்கல் வெளியீட்டில் பின்வாங்கல் இல்லை," என்கிறார் அருண்விஜய். அறிவழகன் இயக்கத்தில் உரு வாகியிருக்கும் 'குற்றம் 23' பொங் கலுக்கு வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது. ஏற்கெனவே விஜய்யின் 'பைரவா' உள்ளிட்ட 6 படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள் ளன. இதில் எந்தப் படம் பின்வாங் கும் என்பது தெரியவில்லை.

இந்நிலையில், "நான் முழு ஈடுபாட்டுடன் எனது வேலையைச் செய்ய மட்டுமே இங்கிருக்கிறேன். ஜாம்பவான்களுடன் போட்டி போட அல்ல. தயவு செய்து முதுகில் குத்தாதீர்கள். வாழுங்கள், வாழ விடுங்கள்" என்று அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதி விட்டுள்ளார். பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கச் சொல்வதால்தான் அருண்விஜய் இவ்வாறு குறிப்பிட் டுள்ளார் என்று செய்தி வெளியா னது. இது தொடர்பாக அவர் தற்போது விளக்கமளித்துள்ளார்.

'குற்றம் 23' படத்தில் அருண்விஜய், மகிமா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!