ஸிம்பாப்வே வீரருக்கு ஓராண்டு தடை

துபாய்: ஸிம்பாப்வே கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச் சாளர் 26 வயதான பிரையன் விட்டோரி. இவர் கடந்த பிப்ரவரி மாதம், பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு பந்து வீசுவ தில் சில மாற்றங்களைச் செய்து மீண்டும் அனைத்துல க கிரிக்கெட் மன்றத்திடம் கடந்த ஜூன் மாதம் அனு மதி பெற்றார். இந்த நிலையில் கடந்த மாதம் சொந்த மண்ணில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் கிரிக் கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது அவரது பந்து வீச்சில் சந் தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர். அவரது பந்துவீச்சை ஆய்வுசெய்த போது, விதிமுறைக்குப் புறம் பாக அவரது முழங்கை 15 டிகிரி கோணத்திற்கு மேல் வளைவது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு ஆண்டு இடைவெளியில் 2வது முறையாக விதிமுறைக்குப் புறம்பாக பந்து வீசிய பிரச்சினையில் சிக்கியிருப்பதால் பந்து வீச அவருக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது மன்றம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!