சண்டர்லேண்டை பந்தாடிய மேன்யூ

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் போராடிக் கொண்டிருக் கும் குழுக்களில் ஒன்றான சண்டர்லேண்ட் குழுவுடன் நேற்று அதிகாலை மோதிய மான்செஸ்டர் யுனைடெட் குழு, ஆட்டம் முழுதும் தனது ஆ-திக்கத்தை செலுத்தி சண்டர்லேண்டை பந்தாடியது. இறுதியில் 3=1 என அதை வீழ்த்திய மேன்யூவுக்கு மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ஹென்ரிக் மிக்கிடாரியன் தமது அணிக்கான மூன்றாவது கோலை போட்ட விதம் பார்ப்போரை பர வசத்தில் ஆழ்த்தியது. நேற்றைய ஆட்டத்தில் மேன்யூவை அங்குமிங்கும் நகர விடாமல் தடுக்க நினைத்த சண்டர்லேண்ட் வீரர்களின் முயற்சி பலிக்கவில்லை. படிப்படியாக ஆட்டத்தைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட மேன்யூ, 39ஆம் நிமிடத்தில் ஸ்லாட்டான் இப்ராஹி மோவிச் தந்த பந்தை, தற்காப்பு ஆட்டக்காரரான டேலி பிளிண்ட் சண்டர்லேண்ட் கோல்காப்பாளரின் கைகளுக்கு எட்டா வண்ணம் கோல் கம்பத்துக்குள் வலக்கோடி யில் பந்தை உதைத்து கோலாக் கினார்.

நேற்றைய ஆட்டத்தில் கிடைத்த பந்தை தமது பின்னங்காலால் உதைத்து கோல் போடும் ஹென்ரிக் மிக்கிடாரியன் (நடுவில் சிவப்பு சீருடையில்). படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!