வாஷிங்டன்: ஹவாயி தீவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வருகை மேற்கொண்டுள்ள ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, அங்குள்ள பெர்ல் ஹார்பர் நினை விடத்திற்குச் செல்வதற்கு முன்னதாக பல நினைவிடங் களுக்கு வருகை புரிந்தார். ஷின்சோ அபே ஹவாய் தீவுக்கு வந்தவுடன், அங்குள்ள பசிபிக் பகுதியின் தேசிய நினைவு கல்லறையில் மலர் வளையம் வைத்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். அமெரிக்காவுக்கும் ஜப்பானுக் கும் இடையேயான வலுவான உறவை வெளிப்படுத்தும் நோக் கத்தில் திரு அபேயின் இந்த ஹவாயி வருகை அமைந்துள்ளது. இரண்டு நாள் வருகை மேற்கொண்டு திங்கட்கிழமை ஹவாயி வந்துசேர்ந்த திரு அபே மறுநாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பெர்ல் ஹார்பர் நினைவிடத்திற்கு வருகை புரிவது திட்டம். 1941ஆம் ஆண்டு பெர்ல் ஹார்பரில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளம் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியது. அதனைக் குறிக்கும் வகையில் அங்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
ஹவாயி தீவில் உள்ள தேசிய நினைவிட கல்லறையில் திரு அபே மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். படம்: ஏஎஃப்பி பிலிப்பீன்சில் வீசிய புயல் காற்றுடன் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகளிலும் தெருக்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளநீர் தேங்கியுள்ள தெருக்களைக் கடந்துசெல்ல குடியிருப்பாளர்கள் சிரமப்படுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்