கேலாங்கில் போலிசாரைச் சட்ட விரோதமாகச் சூழ்ந்த கும்பலைச் சேர்ந்த 22 வயது ஆடவருக்கு நேற்று நீதிமன்றத்தில் பத்து வார சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. இங் பிங் ஹுயி என்னும் அந்த ஆடவர் சட்டவிரோதமாகக் கூடிய குற்றத்தை ஒப்புக்கொண் டதைத் தொடர்ந்து தண்டிக்கப்பட் டார். கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி இரவு 9.45 மணி யளவில் விலைமாதர் கும்பலைப் பிடிப்பதற்காக சாதாரண உடை யில் ஐந்து போலிசார் சென்றி ருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந் தது. லோரோங் 14க்கும் லோரோங் 16க்கும் இடையில் உள்ள பின் சந்தில் சட்டவிரோத சூதாட்டத்தை நடத்திய சந்தேகத்தின் பேரில் ஹேரல்ட் ஹோ குவோ லங் என்னும் பதின்ம வயது ஆட வரைக் கைது செய்த போலிசார் அவனது கைகளுக்கு விலங்கிட்டனர்.
அப்போது சட்டவிரோதமாகத் திரண்ட கும்பல் ஒன்று போலி சாரைச் சூழ்ந்தது. கிட்டத்தட்ட 80 முதல் 100 பேர் வரை கொண்ட அக்கும்பல் இளையரை விடுவிக்குமாறு உரக்கக் குரல் எழுப்பியது. பின்னோக்கிச் செல்லுமாறு போலிசார் பலமுறை கேட்டுக் கொண்டும் அக்கும்பல் தகாத வார்த்கைளைப் பயன்படுத்திய வாறே போலிசாரை நோக்கிச் சென்றது.