வசதி குறைந்தோருக்கு உண வளிக்கும் விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் தினத்தின்போது சுமார் 100 பிரியாணி பொட்டலங்கள் வழங் கப்பட்டன. சமையல் கலை நிபுணரான ஷெட்டி பாலசந்திர ராமா (பாலா) என்பவர் இந்த உணவளிக்கும் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தார். பிரியாணி கடை முதலாளியான முத்துசாமி ஞானசேகரன், 32, என்பவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது இந்த உணவளிக் கும் திட்டம் பாலாவுக்கு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் புகழ்பெற்று விளங்கும் ஆம்பூர் பிரியாணி முத்துசாமி கடையின் சிறப்பு.
புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கு 500 பிரியாணி பொட்டலங்களை தானமாக வழங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் முத்துசாமியை அணுகி இருந்தனர். அதனைத் தொடர்ந்து அத் தகைய ஊழியர்களுக்கும் பராமரிப்பு இல்லங்களில் உள்ளோருக்கும் பிரியாணிப் பொட்டலங்கள் வழங் குவதற்காக நிதித் திரட்டு நட வடிக்கையில் பாலா ஈடுபட்டார். நன்கொடையாகப் பெறப்படும் ஒவ்வொரு ஐந்து வெள்ளியும் ஒரு பிரியாணிப் பொட்டலம் தானமாக வழங்கப் பயன்படும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் தினத்தன்று லிட்டில் இந்தியா பகுதியில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் பிரியாணி கடை நடத்தும் முத்துசாமியிடமிருந்து உணவுப் பொட்டலத்தைப் பெற்றார். (வலக்கோடி) பிரியாணி தானத்திற்கு ஏற்பாடு செய்த பாலா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்