ராம மோகன ராவ் திடீர் குற்றச்சாட்டு

தமிழகத்தின் முன்னாள் தலை மைச் செயலாளர் ராம மோகன ராவ் தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தின ஒரு வாரத்துக்குப் பிறகு திடீரென நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து மத்திய, மாநில அரசுகள் மீது கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். "முதல்வர் ஜெயலலிதாவிடம் நான் பல ஆண்டுகள் பயிற்சி பெற்றவன். தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து என்னை மாற்றி விட்டுத்தான் என் வீட்டில் சோதனை நடத்தியிருக்க வேண் டும். சோதனை நடத்த மகனின் பெயரில் அனுமதி வாங்கிவிட்டு, என் வீட்டில் சோதனை நடத்தியது எப்படி? 32 ஆண்டுகாலம் அனு பவம் உள்ள அதிகாரியை இப் படித்தான் நடத்துவதா? என்மீதான புகாருக்கு ஆதாரமுள்ளதா?" என பல கேள்விகளை அவர் முன் வைத்தார். துப்பாக்கி முனையில் வருமான வரித்துறையினர் தனது வீட்டில் சோதனை நடத்தியதாகவும் சட்ட விரோதமாகத் தான் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டதாகவும் கடைசியில் தனது வீட்டில் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!