சுவா சூ காங் எல்ஆர்டி நிலை யத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு புதிய தளமேடைகள் நேற்று முதல் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டன. அந்த இரு தளமேடைகளும் ரயில்களில் ஏறும், இறங்கும் பயணிகளுக்கு வெவ்வேறு பாதைகளைக் காட்டும். இதன் மூலம் பயணிகளின் கூட்ட நெரி சல் குறையும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. 1ஆம் 2ஆம் தளமேடைகளில் உள்ள பயணிகள் ரயில்களில் ஏறுவர். 3ஆம் 4ஆம் தளமேடைக ளில் பயணிகள் இறங்குவர்.
"புதிய தளமேடைகள் கட்டப் படுவதற்கு முன் எப்போதும் கூட்ட நெரிசலாக இருக்கும். இப்போது அந்த நெரிசல் குறையும் என்று நினைக்கிறேன்," என்றார் நாள்தோறும் சேகார் நிலையத்துக்கும் சுவா சூ காங் நிலை யத்துக்கும் இடையே பயணம் செய்யும் திரு லெக்ஸ் டான். "முன்பு உள்ளே செல்வதற்கும் வெளியேறுவதற்கும் ஒரு வழி மட்டும் இருந்ததால், உச்ச நேரங் களில் கூட்ட நெரிசல், மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தி யது. இப்போது நிலைமை சீரடை யும் என்று எதிர்பார்க்கிறேன்," என்றார் வாரத்துக்கு மூன்று முறை சவுத் வியூ நிலையத் துக்கும் சுவா சூ காங் நிலை யத்துக்கும் இடையே பயணம் செய்யும் திருவாட்டி சுஸானா சைரி.