பெண்களின் நம்பிக்கை ஒளி

சுதாஸகி ராமன்

ஆண், பெண் என்ற பாகுபாடு வெளிப்படையாகப் பார்க்கப்படாவிட்டாலும் எந்தவொரு துறையிலும் ஆண்களோடு போட்டியிட்டு பெண்கள் சாதனை புரியும்போது அது பெரிய, முக்கியமான வெற்றியாகவே இப்போதும் கருதப்படுகிறது. அந்த வரிசையில் சாதனைப் பெண்களுக்குச் சவாலான ஆண்டாகவே இருந்தது 2016. பொருளியல் சரிவு, அரசியல் கொந்தளிப்பு, பயங்கரவாதம் என்று புதிய மாற்றங்கள், எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவற்றால் மக்களைத் திகைப்பில் ஆழ்த்திய 2016 இன்னும் சில நாட்களில் விடைபெற்றுச் செல்ல இருக்கிறது.

இவ்வாண்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள் மக்களிடையே பீதி, குழப்பம், ஏமாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தி இருந்தாலும் அவை பெண்கள் மீது மக்கள் வைத்திருந்த எண்ணத்தை மாற்றின. ஆண் ஆதிக்கம் ஓங்கியுள்ள இவ்வுலகில் பெண்களும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இளம் பெண்களிடையே அவை ஏற்படுத்தியுள்ளன. 'கனவு காணுங்கள்; அவை ஒரு நாள் நனவாகும்' என்ற கருத்து சிறுமிகளின் பிஞ்சு மனதில் எதிரொலிக்கும் அளவிற்கு இச்சம்பவங்கள் அமைந்தன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிக்கொள்ள பிரிட்டன் எண்ணியபோது முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனின் பதவியைப் பிடித்தார் தெரெசா மே. இரும்புப் பிடியோடு 1980களில் அந்நாட்டை ஆண்ட மார்கரெட் தாட்சருக்குப் பிறகு பிரதமரான முதல் பெண்மணி தெரெசா மே. கேமரூன் விட்டுச்சென்ற பிரிட்டனை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துகிறார் அவர். அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் எனும் பெருமையைத் தனதாக்கிக்கொள்ளும் நோக்கில் தற்போது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்பை எதிர்த்து துணிவுடன் போட்டியிட்டார் ஹில்லரி கிளின்டன். தேர்தலுக்கு சில தினங்கள் வரை சாதகமான சூழலே நிலவினாலும் எதிர்பாராத விதமாக தேர்தல் முடிவுகள் அவருக்குப் பாதகமாக அமைந்தன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!