மாதுக்கு ஐந்து ஆண்டு சிறை

அலுவலக எழுத்தர் ஒருவர் ஓராண்டு காலமாக கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான $600,000 தொகையை அமுக்கிக்கொண்டார். சிம் சியோவ் ‌ஷி, 30, என்ற அந்த எழுத்தருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நம்பிக்கை மோசடி செய்ததாகக் கூறும் குற்றச்சாட்டின் பேரில் அந்த மாது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மலேசியரான அந்த மாது, ஃபு யுயான் கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் ஒன்பது ஆண்டுகாலம் வேலை பார்த்தார் என்று தெரிவிக்கப்பட்டது. நிறுவனத்தின் கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த அந்த மாது, 2015 ஜூன் முதல் நிறுவனத்தின் பணத்தைத் திருடத் தொடங்கினார். அவர் சென்ற ஆண்டு ஜூன் 2ஆம் தேதிக்கும் இந்த ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதிக்கும் இடையில் மொத்தம் $611,740.14 மதிப்புள்ள 60க்கும் மேற்பட்ட காசோலை களைச் சட்டத்திற்கு புறம்பான முறையில் தனக்காகப் பயன்படுத்திக் கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!