சாலை விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளோட்டிக்குக் காயம் விளைவித்த குற்றத்தின் பேரில் ஆடவர் ஒருவருக்கு ஒரு வாரச் சிறைத் தண்டனையும் வாகனம் ஓட்ட இரண்டு ஆண்டுகள் தடையும் விதிக்கப் பட்டுள்ளது.
போக்குவரத்து விளக்கு சிவப்பாக மாறியும் 31 வயது காய் சியுன் தாம் ஓட்டிக்கொண்டிருந்த வாகனத்தை நிறுத்தாமல் சென்று மோட்டார் சைக்கிளோட்டியான 40 வயது திரு சோங் ஃபூங் யீ மீது மோதினார்.