துப்புரவு ஊழியர் ஒருவர் தனது 83 வயது தாயாரின் வங்கிக் கணக்கிலிருந்து ஐந்து மாதத் திற்குள் 21,776 வெள்ளியைத் திருடினார்.
தாயாரின் தானியக்க வங்கி இயந்திர அட்டையைப் பயன்படுத்தி அவர் புரிந்த குற்றங்களுக்காக அவருக்கு நேற்று ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. 57 வயது முகம்மது நசீர் சலீம் 48 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.
அதில் 10 குற்றங்களை அவர் ஒப்புக் கொண்டார். 2015 ஆகஸ்ட்டில் உட்லண்ட்ஸ் வீட்டில் திருவாட்டி மஸ்னா முகம்மது நூரின் பிஓஎஸ்பி வங்கி அட்டையைத் திருடியது அதில் அடங்கும்.