பெர்லின்: இஸ்லாமிய பயங்கர வாதம் ஜெர்மனியை எதிர் நோக்கியிருக்கும் மிகப் பெரிய மிரட்டல் என்று ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார். அவரது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜெர்மனியில் நடந்த பயங்கரவாதச் செயல்களைப் பற்றி பேசினார். இரண்டு வாரங்களுக்கு முன்பு பெர்லின் நகரில் டுனிசிய நாட்டைச் சேர்ந்த ஒருவன் லாரியை ஓட்டிச் சென்று கூட்டத் தினர் மீது மோதியதில் 12 பேர் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் காயம் அடைந்தனர்.
அத்தாக்குதல் பற்றி பேசிய திருவாட்டி மெர்க்கல், பாதுகாப்பு நாடி வரும் அகதிகளில் சிலர் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபடுவது "வெறுப்பாக" உள்ளது என்று கூறினார். பெர்லின் தாக்குதல், கடந்த ஜூலை மாதம் நடந்த தாக்குதல் இவற்றில் ஈடுபட்டது அடைக்கலம் நாடி வந்த அகதிகள் என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார். 2016ஆம் ஆண்டு "கடுமையான சோதனைக் காலமாக" இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.