வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரி களை அமெரிக்கா வெளியேற்றி யது போல ரஷ்யாவும் பதிலுக்குப் பதில் பழிவாங்காது என்று ரஷ்ய அதிபர் புட்டின் அறிவித்ததை அடுத்து அவரை திரு டோனல்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவிருக்கும் டிரம்ப் டுவிட்டர் பக்கத்தில் திரு புட்டினின் செயலைப் பாராட்டி யுள்ளார். முன்னதாக திரு புட்டின், ரஷ்யாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி கள் வெளியேற்றப்படமாட்டார்கள் என்று அறிவித்தார்.
கணினி ஊடுருவல் விவகாரம் தொடர்பில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகளை விதித்தது. அத்துடன் அமெரிக் காவிலிருந்து ரஷ்ய தூதரக அதிகாரிகள் 35 பேரை அமெரிக்கா வெளியேற்றியது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சு அதிபர் புட்டினுக்கு ஆலோசனை கூறியது. அதை அதிபர் புட்டின் நிராகரித்து விட்டார்.