கோலாலம்பூர்: கோலாலம்பூரில் உள்ள பேருந்து முனையத்தில் விரைவு பேருந்துகளை மலேசிய போக்குவரத்து அமைச்சு அதிகாரிகள் திடீர் சோதனை செய்ததில் பல பேருந்து நிறுவனங்கள் சட்ட விதிமுறைகளை மீறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிங்கப்பூரை நோக்கி செல்லவிருந்த ஒரு விரைவு பேருந்தில் 2-வது ஓட்டுநர் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் பேருந்து நிறுவனத்திற்கு அது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் 2-வது ஓட்டுநர் வேலையில் அமர்த்தப்படாத வரை அந்த பேருந்து ஓட்டுநர் பயணத்தைத் தொடங்க அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய் கூறினார். சில பேருந்துகளில் டயர் பழுதடைந்திருந்தும் சில பேருந்துகளில் மோட்டார் சைக்கிள்கள் ஏற்றப்பட்டிருந்ததும் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டன. கிறிஸ்துமஸ் முதல் நாள் ஜோகூரில் நடந்த பேருந்து விபத்தைத் தொடர்ந்து விரைவு பேருந்துகள் சோதிக்கப்படுகின்றன.