மின்னணு யுகத்திலும் இழிநிலை: ரஞ்சித் வேதனை

சென்னை: மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ள சட்டம் அனுமதிக்கவில்லை என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். மதுரையில் மனிதக் கழிவு அகற்றுவோர் வாழ்வுரிமை கருத் தரங்கில் பேசிய அவர், மின்னணு யுகத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் இழிநிலை தமக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார். ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை,

கறுப்புப் பண ஒழிப்பு குறித்து பேசும் இந்தக் கால கட்டத்தில் நாம் முதலில் மனித மனங்களில் உள்ள அழுக்கை அகற்றுவதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், சமூக சீர்திருத்தம் இன்னும் நிகழவேயில்லை என்றார். "மின்னணு யுகத்தை நோக்கி நாடு முன்னேறுகின்ற வேளையில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் இழிநிலை இந்திய சமூகத்தில் தொடர்கிறது. இது வேதனைக்குரிய நிலை. "இந்த இழிநிலையில் மக்களைக் காப்பதற்கான சட்டத்தை அரசாங் கம் இதுவரையிலும் நடைமுறைப் படுத்தாதது கவலை அளிக்கிறது," என்றார் ரஞ்சித்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!