சென்னை: காலஞ்சென்ற முதல்வர் கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெய லலிதா ஆகியோரே அதிமுகவின் அடையாளங்கள் என்றும் அவர் களைத் தவிர, வேறு யாரும் கட்சி யில் முன்னிலைப்படுத்தப்பட மாட் டார்கள் என்றும் சசிகலா உறுதி படத் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் முதன்முறையாக கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரை யாற்றிய அவர், இன்று தங்களை விமர்சிப்பவர்களும் கூட, நாளை மனமுவந்து தங்களைப் பின் தொடரும் அளவுக்கு, புனிதமான பொது வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். "முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவுடன் ஆயிரம் ஆயிரம் கூட் டங்களுக்குச் சென்றிருக்கிறேன்.
ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கும் மேலாக, எத்தனையோ கூட்டங்களில் அவருடன் கலந்துகொண்டேன். ஆனால் இன்று, மேடைக்கு வந்து உங்களிடையே பேசுகிற ஒரு சூழல் எனக்கு உருவாகி இருக்கிறது. "தொண்டர்களின் அன்புக் கட்டளையை ஏற்க வேண்டிய கடமையும் கட்டாயமும் எனக்கு ஏற்பட்டு உள்ளது. நான் கனவிலும் கூட நினைக்காத ஒன்று; கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத ஒன்று நடந்துவிட்டது. தலையில் இடி வந்து விழுந்ததைப் போல, நன்கு உடல் நலம் தேறி வந்தவர், நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். தன்னை நம்பி வந்த யாரையும் கைவிடாதவர், இன்று தனது மரணத்தின் மூலம் நம் அனைவ ரையும் கைவிட்டுவிட்டார்," என்று கண்ணீர்மல்கப் பேசினார் சசிகலா.
தலைமை அலுவலகம் வந்த சசிகலாவை வரவேற்ற தொண்டர்கள். படம்: ஏஎஃப்பி