வலிமையான தமிழகத்தை உருவாக்க முதல்வர் அழைப்பு

சென்னை: தமிழக மக்களின் விருப் பங்கள் மற்றும் தேவைகளைக் கருத் தில் கொண்டு, அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்களை மக்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், அனைவரும் ஒற்றுமையுடன் அயராது உழைத்து, வளமும் வலிமையும் மிக்க தமிழ்நாட்டை உருவாக்கிட உறுதி யேற்க அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் புத்தாண்டு தமிழக மக்களுக்கு மங்காத எழுச்சியையும் நிறைவான வளர்ச்சியையும் நீங்காத வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என முதல்வர் கூறியுள்ளார்.

"தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடச் செய்ய வேண்டும் என்பதும், இந்தியாவிலேயே தமிழ் நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்பதும்தான் தனது அரசின் குறிக்கோள் என்று சூளு ரைத்து, தமிழக மக்களின் நல் வாழ்விற்காக அயராது பாடுபட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. "அவரது கனவை நனவாக்கும் வகையில், அவரது வழியில் தமிழக அரசு செயல்படுகிறது. காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா வகுத்த எண்ணற்ற திட்டங்களை சிறப்பான முறையில் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது," என்று முதல்வர் பன்னீர்செல்வம் மேலும் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!