மூன்று நாயகிகளுடன் விஜய்

விஜய் நடித்துள்ள 'பைரவா' படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. இது அவருடைய 60வது படம். இதையடுத்து அவருடைய 61வது படத்தை 'தெறி' படத்தை இயக்கிய அட்லிதான் இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு உத்தேசமாக 'தெறி 2' எனப் பெயரிடப்பட்டிருந்தாலும் அது 'தெறி' படத்தின் 2ஆம் பாகமாக இருக்காது. ஏற்கெனவே விஜய்யுடன் 'துப்பாக்கி', 'ஜில்லா' படங்களில் நடித்த காஜல் அகர்வால், 'தெறி', 'கத்தி' படங்களில் நடித்த சமந்தா ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கின்றனர். படத்துக்குக் கூடுதல் விளம்பரம் சேர்க்கும் விதமாக முக்கிய வேடத்தில் ஜோதிகாவும் நடிக்க இருக்கிறார்.

வழக்கமான வேடங்களைத் தவிர்த்து நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள மாறுபட்ட வேடங்களுக்காகக் காத்திருந்தார் ஜோதிகா. அப்படியொரு கதாபாத்திரம் இந்தப் படத்தில் இடம்பெறுவதால் அதற்கு ஜோதிகா பொருத்தமாக இருப்பார் என்று படக் குழு முடிவு செய்து அவரை அணுகியது. ஜோதிகாவும் வேடத்தை ஏற்க ஒத்துக் கொண்டுவிட்டார். 3 கதாநாயகிகள் இருந்தாலும் மூவருக்கும் சமமான வேடமாக கதாபாத்திரங்களின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பகுதி காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வுச் செய்வதற்காக இயக்குநர் அட்லி தலைமையில் படக்குழுவினர் அமெரிக்கா செல்ல இருக்கிறார்கள். அட்லி இயக்கிய முதல் படம் 'ராஜா ராணி'. ஆர்யா, நயன்தாரா நடித்த அந்தப்படம் மணிரத்னம் இயக்கிய 'மௌனராகம்' பாணியில் இருப்பதாக அப்போது விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து விஜய் நடித்த 'தெறி' படத்தை விஜயகாந்தின் 'சத்ரியன்' பாணியில் இருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது அவர் விஜய்யை இயக்கும் படம் எந்த மாதிரியான கதையில் உருவாகிறது என்று விசாரித்தபோது அந்தப் படம் ரஜினி, பிரபு நடித்த 'தர்மத்தின் தலைவன்' பாணியில் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தில் ரஜினி=பிரபு இருவரும் அண்ணன் தம்பியாக நடித்தது போன்று இந்தப் படத்தில் விஜய்யே இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!