சாவித்திரியாக வித்யாபாலன்

மறைந்த நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் 'மகாநதி' என்ற பெயரில் படமாக உருவாக உள்ளது. திரையுலகில் சாவித்திரி முத்திரை பதித்தது தொடங்கி அவரது இறுதிக் காலத்தில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களைக் கதைக் களமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் சாவித்திரி வேடத்தில் சமந்தா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்கிறார் என்று உறுதியான செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படியென்றால் சாவித்திரி வேடத்தில் யார் நடிப்பது என்று விசாரித்தால் அதற்கு ஏற்றவர் நடிகை வித்யா பாலன்தான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது

'மகாநதி' படக்குழு. இதற்கு முன்பு கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான 'தி டர்ட்டிப் பிக்சர்ஸ்' படத்தில் வித்யாபாலன், சில்க்காக நடித்திருந்தார். அந்த வேடத்தில் நடித்தமைக்காக அவருக்குத் தேசிய விருதும் கிடைத்தது. அதனால் இந்தப் படத்திலும் சாவித்திரியாக அவர் நடித்தால் படத்திற்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று என்று படக்குழு எண்ணுகிறது. வித்யா பாலனும் இதற்கு சம்மதித்து விட்டார் என்கிறது தெலுங்கு திரை உலகம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!