லண்டன்: ஹல் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் கடுமையான போராட் டத்திற்குப் பிறகு எவர்ட்டன் சம நிலை கண்டது. ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் எவர்ட்டனின் ராஸ் பார்க்லி தலையால் முட்டிய பந்து வலை யைத் தீண்டியது. இதன் விளைவாகத் தோல்வி யின் விளிம்பிலிருந்து எவர்ட்டன் தப்பியது. ஆட்டம் 2=2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. சொந்த விளையாட்டரங்கத்தில் விளையாடிய ஹல் சிட்டி மிகுந்த முனைப்புடன் ஆட்டத்தைத் தொடங்கியது. வெற்றிக்குக் குறி வைத்து விளையாடிய ஹல் சிட்டி ஆட்டத் தின் ஆறாவது நிமிடத்திலேயே கோல் போட்டது.
அக்குழுவின் அணித் தலைவர் மைக்கல் டோசன் அனுப்பிய பந்து எவர்ட்டன் கோல்காப்பாளரைக் கடந்து சென்று கோலானது. இதுவே இப்பருவத்தில் டோசன் புகுத்தியிருக்கும் மூன்றாவது கோல். துவண்டுவிடாமல் போராடிய எவர்ட்டன் ஆட்டத்தைச் சமன் செய்யத் தாக்குதல்களை நடத் தியது. அக்குழுவின் சீமஸ் கோல்மன் தலையால் முட்டிய பந்து கோல் கம்பம் மீது பட்டு வெளியானது. இடைவேளைக்குச் சில வினாடிகளே எஞ்சியிருந்தபோது எவர்ட்டன் ஆட்டத்தைச் சமன் செய்தது. எவர்ட்டனுக்குக் கிடைத்த கார்னர் வாய்ப்பிலிருந்து வந்த பந்தைத் தவறுதலாகத் தமது வலைக்குள் தள்ளி சொந்த கோல் போட்டார் ஹல் சிட்டியின் கோல்காப்பாளர் மார்ஷல். இ டை வே ளை யி ன் போ து ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. பிற்பாதியில் இரு குழுக்களும் கோல் முயற்சிகளில் ஈடுபட்டன.
எவர்ட்டன் குழுவின் சீமஸ் கோல்மன் (நடுவில்) தலையால் முட்டி வலை நோக்கி அனுப்பும் பந்து கோல் கம்பம் மீது பட்டு வெளியானது. கோல் போடும் வாய்ப்புகளை எவர்ட்டன் பலமுறை நூலிழையில் தவறவிட்டது. இருப்பினும், இறுதி வரை விட்டுக் கொடுக்காமல் அக்குழு சமநிலை கண்டது. படம்: ஏஎஃப்பி