பள்ளி ஆசிரியராக இருந்து பதவி ஓய்வு பெற்ற திருமதி சத்யபாமா கருணாகர னுக்கு 48 வயதானபோது, அவரது கணவர் மாரடைப் பால் காலமானார். பத்து ஆண்டுகள் கழித்து அவரது குடும்பத் தில் மீண்டும் பேரிடர் தாக் கியது. இப்போது அவரது 34 வயது மகள் மூளை புற்றுநோயால் காலமானார். அடுத்தடுத்த இரு குடும்ப உறுப்பினர்களை இழந்த பெரும் துக்கத்தி லிருந்து மீள, திருமதி சத்ய பாமா தம்மைப் போல குடும்ப உறுப்பினர்களை இழந்த சோகத்தில் உள்ள வர்களுக்கு உதவும் வழியை நாடினார்.
கடந்த இரண்டு ஆண் டுகளாக முன்னோடித் தலைமுறைத் தூதுவர் என்ற முறையில் தற்போது 73 வயதாகும் திருமதி சத்யபாமா வீடு வீடாகச் சென்று அரசாங்கத் திட்டங் கள் பற்றியும் மூத்த குடிமக் களுக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகள் பற்றியும் விளக்கி, அவர்களை துடிப் புடனும் நம்பிக்கையுடனும் இருக்க ஊக்கமூட்டுகிறார்.
முன்னோடித் தலைமுறைத் தூதுவர் நிகழ்ச்சியில் பிரதமர் லீயுடன் கைகுலுக்கிறார் திருமதி சத்யபாமா கருணாகரன். படம்: தொடர்பு தகவல் அமைச்சு