கடல் அலைகளை கரையில் இருந்தபடி வேடிக்கை பார்ப் பது வாழ்க்கை அல்ல. அலைகளில் விழுந்து புரண்டு நீந்தி சமாளித்து எழுந்து கரையேறுவதுதான் வாழ்க்கை. கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த பாடமும் வாழ்க்கையில் கடைசி வரை வராது. இத்தகைய நியதி களை எல்லாம் பிள்ளைகளின் மனதில், குறிப்பாக அவர் களின் பிஞ்சு வயதிலேயே நன்கு பதியவைக்க வேண்டிய தேவை முன் என்போதையும்விட இப்போது வேகமாக அதிகரித்து வருகிறது. உலகம் படுவேகமாக மாறி வருவதே இதற்கான காரணம்.
எதிர்கால உலகுக்குத் தேவைப்படும் நன்னெறிகள் பிள்ளைகளிடம் வேர் ஊன்ற வேண்டும் என்ற நோக்கத் துடன் செயல்பட வேண்டிய முக்கியமான ஒரு நிலையில் பிள்ளைகளும் பெற்றோரும் குடும்பத்தாரும் சமூகத்தாரும் இருக்கிறார்கள் என்றாலும் இதில் இன்னும் சிறப்பான பங்காற்றும் நிலையில் இருப்பவை பள்ளிக்கூடங்கள். ஆனால் உலகம் முழுவதிலும் பார்க்கையில், பிள்ளை களை வகுப்புகளிலேயே அடைத்துவைத்து பாடத்திட்டத் தில் இடம்பெற்றுள்ள பாடங்களை, தேர்ச்சிகளுக்காக மட் டும் படிபடி என்று இடைவிடாது படிக்கவைத்து, அவர்களை ஏட்டுக்கல்வியில் ஒரேயடியாக மூழ்கவைத்து, அடுத்த மாணவரைவிட அதிக மதிப்பெண்களை எடுக்க வேண் டும் என்று அவர்களைக் கசக்கிப்பிழிந்து பாடாய்ப்படுத் தும் ஒரு கல்விக்கூட செக்காகவே பள்ளிக்கூடங்கள் பெரும்பாலும் காணப்படுகின்றன.
மாணவர்களும் புத்தகமும் கையுமாகப் பாடத்திட்ட ஏட்டுக்கல்வியையே சுற்றிசுற்றிவரும் செக்குமாடுகளைப் போலவே வளர்கிறார்கள். இத்தகைய ஓர் அணுகுமுறை, வகுப்பறைகளில் போதிக்கப்படும் பாடங்களுக்கும் தேர்ச் சிகளுக்கும் அறிவிற்கும் வேலை இடங்களில் தேவைப் படக்கூடிய தேர்ச்சிகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் இடை யில் அதிகரித்து வரும் இடைவெளியைக் குறைப்பதாகத் தெரியவில்லை.