செங்காங்கில் ஒரு பேருந்தி லிருந்து நிர்வாணக் கோலத்தில் ஓர் ஆடவர் வெள்ளிக்கிழமை மதியம் கைது செய்யப்பட்டார். அந்தப் பேருந்து ஒரு போலிஸ் சாவடிக்குக்கு அரு கில் நின்றிருந்ததாகவும் அதற் குள் நிர்வாணமான ஆடவரைக் கண்ட ஒரு வழிப்போக்கர் போலிஸ் நிலையத்திலிருந்து அதிகாரிகளை அங்கு கொண்டு வந்ததாகவும் நம்பப் படுகிறது. செங்காங் ஈஸ்ட் வேயில் மதியம் சுமார் 2 மணிக்கு அந் தச் சம்பவம் நிகழ்ந்தது.
ஒரு நிர்வாணமான ஆடவர் பேருந்து சேவை 159ன் கதவை உதைப் பதைக் கண்டதாகவும் உடனே போலிஸ் நிலையத்துக்கு ஓடி உதவி நாடியதாகவும் ஒரு பெண் கூறினார். ஸ்டோம்ப் தளத்தில் பதி வேற்றப்பட்ட காணொளியில் அந்த ஆடவரை இரண்டு போலிஸ் அதிகாரிகள் கொண்டு செல்வது பதிவாகி உள்ளது. பொது இடங்களிலோ அல் லது தனி இடத்தில் மற்றவர்கள் பார்க்கும் படியோ நிர்வாண மாகத் தோன்றும் குற்றம் நிரூ பிக்கப்பட்டால் $2,000 வரை அபராதமோ மூன்று மாதம் வரை சிறையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.