பினாங்கு: தண்ணீர்மலை முருகன் கோயிலில் 162 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழக் கம் இவ்வாண்டு தைப்பூசத்தின் போது மாற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தைப்பூசத்தின்போது அந்தக் கோயிலில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வெள்ளிரதம் ஊர்வலமாகக் கொண்டுசெல்லப் படுவது 162 ஆண்டு கால வழக்கமாக இருந்து வருகிறது. சில மாதங்களாக அச்சமூகத் தினர் மீது ஜனநாயக செயல்கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து அரசு சாரா இந்தியர் அமைப்புகள் தாக்குதல் போக்கைக் காட்டி வருகின்றன. கடந்த 10 நாட்களில் அந்தப் போக்கு தீவிரமடைந் துள்ளது.
126 ஆண்டுகளாக வெள்ளி ரதத்தையும் அதற்கு முன்பு 36 ஆண்டுகளாக மரத்தாலான ரதத் தையும் நாட்டுக்கோட்டைச் செட்டி யார்கள் ஊர்வலமாகக் கொண்டு செல்வதாகக் கூறப்படுகிறது. வெள்ளிரதத்தில் செட்டியார்கள் மட்டுமே ஏறிச் செல்ல அனுமதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது, பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம் மூன்று மில்லியன் ரிங்கிட் செலவில் தங்கரதம் ஒன்றை உருவாக்கி உள்ளது. அடுத்த மாதம் 9ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள தைப் பூசத் திருவிழாவின்போது இந்தத் தங்கரதமும் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.