தகுதி பெறுகின்ற சுமார் 860,000 வீவக குடும்பங்கள் ஜனவரி மாதம் அடுத்த தவணை ஜிஎஸ்டி பற்றுச்சீட்டையும் பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடியையும் பெற விருக்கின்றன. சிங்கப்பூர் குடி யுரிமை பெற்றுள்ள குடியிருப் பாளர்களுக்கு இவை கிடைக்க இருக்கின்றன. வீடுகளின் வகையைப் பொறுத்து இந்தத் தள்ளுபடி தொகை வேறுபடும் என்றும் இது $65 வரை இருக்கும் என்றும் நிதி அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டத்தை அரசாங்கம் நிரந்தர மாக்கியிருக்கிறது. இந்தத் திட் டம் குறைந்த வருமான சிங்கப் பூரர்களுக்கு உதவுவதற்காக 2012 வரவுசெலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் கீழ் மூன்று விதமான தள்ளுபடிகள் கொடுக்கப்படு கின்றன. அவற்றில் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு=பயனீட்டுக் கட்டண தள்ளுபடி என்பது ஒன்று.