சிங்கப்பூரின் 2017 முதல் குழந்தை, அவசர அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. ஹாஸிம் சுக்ரி என்ற அந்த ஆண் குழந்தை கேகே மாதர், சிறார் மருத்துவமனையில் பிறந்தது. 2.4 கிலோ எடை இருந் தது. தாயும் சேயும் நலமாக இருக் கிறார்கள். பிள்ளைக்குத் தாயான திருமதி யஸ்வானி, 29, ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவில் வேலை பார்க்கிறார். குழந்தையின் தந்தை நூர் ஹஸ்வான், 29, குழந்தை பிறக்கும்போது அருகிலேயே இருந்தார். இவர் ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவில் டாஃல்பின் பயிற்சியாளராக இருக்கிறார்.
"2017ன் முதல் பிள்ளையாக எங்கள் பிள்ளை இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. பிள்ளைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பிரசவம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று இறைவனிடம் கேட்டபடியே இருந்து வந்தேன்," என்று பிள்ளையின் தாயார் கூறி னார். உடல் களைப்பாக இருப்பதை தான் உணர்வதாகவும் இருந்தாலும் தன்னுடைய பிள்ளையுடன் வீட்டிற்குச் செல்ல மகிழ்ச்சியுடன் தான் ஆவலோடு இருப்பதாகவும் அந்தத் தாய் குறிப்பிட்டார்.
2017ன் முதல் குழந்தை ஹஸிம் சுக்ரி. தாயார் யஸ்வானி முகம்மது (வலது), தந்தை நூர் ஹஸ்வான் ஆகியோருடன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்