கேத்தே அரங்கில் தீ: 550 ரசிகர்கள் வெளியேற்றம்

கேத்தே திரையரங்குக் கட்டடத் தில் சனிக்கிழமை மாலையில் தீ மூண்டதன் காரணமாக சுமார் 550 ரசிகர்கள் வெளியேற்றப்பட்ட னர். புகையைச் சுவாசித்ததற்காக ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்தக் கட்டடத்தின் ஏழாவது மாடியில் இருக்கும் மின் விநியோகப் பெட்டி ஒன்றில் தீ மூண்டதே இந்தச் சம்பவத்திற்கு காரணம் என்று தெரியவருகிறது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அங்கு சென்று சேர்ந்ததற்கு முன்பே தீ அணைக்கப்பட்டது. தீ மூண்டதன் காரணமாக திரையரங் கம் அமைந்துள்ள மாடி மூடப் பட்டிருப்பதாகவும் இருந்தாலும் இதர கடைகள் செயல்படுவதாக வும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று குறிப்பிட்டது.

எண் 2 ஹேண்டி ரோட்டில் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்குத் தீ மூண்டிருப்ப தாகத் தனக்குத் தகவல் வந்தது என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது. உடனடியாக அந்தப் படை தீயணைப்பு வாகனங்களையும் மருத்துவ வாகனத்தையும் ஆதரவு வாகனங்களையும் அங்கு அனுப்பியது. முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக ஏறக்குறைய 550 ரசிகர் களை அந்தக் கட்டட ஊழியர்களே வெளியேற்றிவிட்டதாக தற்காப்புப் படை பேச்சாளர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!