ஜூரோங் வெஸ்ட்டில் தற்காலிக சந்தை

ஜூரோங் வெஸ்ட்டில் இருந்த காப்பிக்கடை ஈரச்சந்தை கடந்த அக்டோபர் மாதம் தீயில் அழிந்து விட்டது. அதனால் கடைக்காரர் கள் சுமார் 51 பேர் மிகவும் பாதிக் கப்பட்டனர். கவலையில் இருந்த அவர்களுக்கு இந்தப் புத்தாண்டு மகிழ்ச்சிகரமான ஒன்றாக தொடங்கி இருக்கிறது. ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41ல் இருக்கும் புளோக் 495க்கு எதிரே அவர்களுக்காக தற்காலிகச் சந்தை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. அதில் கடைக்காரர் கள் பலரும் தங்கள் தொழிலை சீனப் புத்தாண்டிற்கு முன்னதாகவே சிறப்பான முறையில் நேற்று தொடங்கினர். ஆறு மாதத்தில் கட்டி முடிக் கப்பட்ட இந்தத் தற்காலிகச் சந் தையைத் துணைப் பிரதமரும் பொருளியல் சமுதாயக் கொள்கை களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முக ரத்னம் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார்.

துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் நேற்று தற்காலிகச் சந்தையை அதிகாரபூர்வமாக திறந்து வைத்து பார்வையிட்டார். ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41, புளோக் 493ல் இருந்த சந்தை, சென்ற ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி தீயில் அழிந்தது. இப்போது ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41ல் இருக்கும் புளோக் 495க்கு எதிரே தற்காலிக சந்தை அமைந்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!