சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு

லக்னோ: சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ராம்கோபால் யாதவ் தெரிவித்துள்ளார். லக்னோவில் நடந்த தேசிய கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து ‌ஷிவ்பால் யாதவை நீக்க வேண்டும் என ராம்கோபால் யாதவ் கூறினார். இந்நிலையில் நடந்து முடிந்த செயற்குழுக் கூட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் தெரிவித்துள் ளார். கட்சியின் பொதுச் செயலாளரான ராம்கோபால் யாதவை கட்சியில் இருந்து 6 ஆண்டு காலத்திற்கு நீக்குவதாகவும் ஜனவரி 5ஆம் தேதி கட்சியின் புதிய கூட்டம் நடக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!